கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
பாணந்துறை - அலோபோமுல்ல பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முச்சக்கரவண்டியின் உரிமையாளரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பொலிஸ் கான்ஸ்டபள் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதி மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்திய போது அலோபோமுல்ல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சாரதியிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
அப்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதன்போது கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவரை நேற்றையதினம்(04.10.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
