இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன் இடம்பெற்ற படுகொலை சம்பவம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு(Photos)
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனது வீட்டு வாசற்தளத்துக்கு முன்பாக கடந்த ஆறாம் மாதம் மூன்றாம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு இம்மாதம் 21ம் திகதி வரை கொலையாளியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முக்கிய சாட்சியான ஒருவரை ஏன் இவ்வளவு காலமும் நீதிமன்றத்திற்கு உட்படுத்தவில்லை என பொலிஸாரிடம் வினாவியதாகவும் பொலிஸார் மிக விரைவில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எட்டு மாதங்கள் கடந்தும் நாங்கள் அலைந்து திரிகிறோம். ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் மௌனமாக இருப்பது வேதனையாக இருக்கின்றது.
அவருடைய வீட்டிலிருந்த சிலரினால் அடித்தும் வெடி வைத்ததும் எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். இதற்கான நீதி கிடைக்க வேண்டும்.
எனது மகனை இழந்து தவிப்பது ஒன்று அவர்களும் இது போன்று வேதனை அடைவார் எனக்
கண்ணீர் மல்கி தெரிவித்துள்ளார்.







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
