தெற்கில் வாழும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும்: கஜேந்திர குமார்
புதிய ஜனாதிபதிக்கான தெரிவு தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள போட்டியாளர்கள் எங்களுடைய அபிலாஷைகளை எப்பொழுதும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தில் எதிர்வரும் புதன்கிழமை(20) நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தெரிவு தேர்தல் தொடர்பான ஆராய்ச்சியொன்று தமிழ் மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரினி பெர்னாண்டோ, ஹர்ஷன நாணயக்கார ஆகியோருடன் நடைபெற்றது.
கலந்துரையாடல்
தேர்தல் தொடர்பில் நீண்ட ஆராய்ச்சியொன்றை மேற்கொண்ட பிறகு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுடனும் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டோம்.
புதிய ஜானதிபதிக்கான தெரிவு தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் போட்டியாளர்கள் எந்தவொரு விதத்திலும் தமிழ் மக்களினுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.
தெற்கில் வாழும் மக்கள் நாட்டில் இன்று இருக்கக்கூடிய இந்த பொருளாதார நெருக்கடி மாற்றங்களானது தீர்வை பெறும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மக்கள் எதிர்பார்ப்பு
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒருவர் இந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
