இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க வாய்ப்பு இல்லை - அர்ஜூன ரணதுங்க
பொருளாதார நெருக்கடியால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுமா என்பது உறுதி இல்லை.மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது.
மக்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறது. கிரிக்கெட்டுக்கு எதிராக அவர்களது மனநிலை இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலே இலங்கையில் இருந்து இந்த போட்டியை மாற்ற முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
15 ஆவது ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியாக ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
