ஆசியக்கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் - தோஹாவில் ஆரம்பம்
ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் போட்டிகள் 2025 நவம்பர் 14 முதல் 23 வரை தோஹாவில் நடைபெறுகின்றன.
இந்தப்போட்டிகள், வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றன.
ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் எட்டு அணிகளும் இதில் பங்கேற்கவுள்ளன.
பங்கேற்றும் அணிககள்
புதிய வடிவமைப்பின் கீழ், டெஸ்ட் விளையாடும் ஐந்து நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தங்கள் "யு" அணிகளை களமிறக்கவுள்ளன.

அதே நேரத்தில் இணை உறுப்பினர்களான ஓமன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகியவை தங்கள் மூத்த அணிகளை களமிறக்கவுள்ளன.
ஆசிய கிரிக்கெட் பேரவை, கண்டம் முழுவதும் அடுத்த தலைமுறை திறமைகளை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக ரைசிங் ஸ்டார்ஸ் நிகழ்வை நடத்துகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |