இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம்: ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய மொஹமட் சிராஜ்
ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 7.2 ஓவர்களில் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 18 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தடுமாறி வருகிறது.
மொஹமட் சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பத்தும் நிஷங்க இரண்டு ஓட்டங்களுடனும் தனஞ்சய டீ சில்வா நான்கு ஓட்டங்களுடனும்சதீர சமரவிக்ரம மற்றும் சரித்த அசலாங்க ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.
இறுதிப் போட்டியானது இன்று (17.09.2023) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும் போட்டியில் மோதுகின்றன.
இறுதிப் போட்டி
ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் முறையே இரண்டு வெற்றிகள் பெற்றதன் மூலம் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டன.
ஆசியக் கிண்ணத் தொடரின் தற்போதைய சம்பியனான இலங்கை 7 ஆவது முறையாக கோப்பையை வெற்றி கொள்ளும் எதிர்பார்ப்புடன் போட்டியில் களமிறங்குகின்றது.
இறுதிப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் ஒன்லைன் ஊடாக நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ள இறுதிப் போட்டி பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |