இலங்கை அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் தோல்வியடையச் செய்துள்ளது.
இலங்கை அணி இந்த போட்டியில் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கையும் கடந்து 179 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது. சார்ஜாவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணியின் சார்பில் அதிகபடியாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் டிலான் மதுஷங்க 37 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடியu இலங்கை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது. கே. மெண்டிஸ் 36 ஓட்டங்களை பெற்றார்.
நாளைய தினம் இந்திய அணியும் இலங்கை அணியும் இரண்டாவது சுப்பர் 4 போட்டியில் பங்கேற்கின்றன.
முதலாம் இணைப்பு
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணிக்கு 176 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
சார்ஜாவில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான்
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் டிலான் மதுஷங்க 37 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், இலங்கை அணி 101ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri