அம்பாறையில் மூடப்பட்ட சதோச கிளைகள்: அஷ்ரப் தாஹிர் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள்
அம்பாறையில்(Ampara) மூடப்பட்ட "சதோச" கிளைகளை மீண்டும் திறக்குமாறு வர்த்தக, உணவு கூட்டுறவு துறை அமைச்சரிடம் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்(Ashraff Thahir) எழுத்து மூலமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை இப்பிரதேச மக்களும் அரசாங்க மானிய அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அஷ்ரப் தாஹிர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வேண்டுகோள்
அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியில் நற்பிட்டிமுனை, மாளிகைகாடு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் திறந்து வைக்கப் பட்ட "சதோச" கிளைகள் மூடப்பட்டு அப்பிரதேச மக்களுக்கு அரச மானிய விலையில் பொருட்களை பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இதற்கமைய, முந்தைய அரசாங்கத்தால் மக்கள் நலன் பாராது மூடப்பட்ட இந்த சதோச கிளைகளை மீண்டும் திறந்து மக்கள் பாவனைக்காக தந்துதவுமாறும் அஷ்ரப் தாஹிர் அமைச்சரிடம் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam