ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் முன்னிலைப்பெறும் 13ஆவது திருத்தம்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம், மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு அரசியல் சுயாட்சியை வழங்குவதே இந்த திருத்தத்தின் நோக்கமாகும்.
இந்தநிலையில், வரலாற்று எதிர்ப்புகள் மற்றும் தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியிலும், தாம் தெரிவு செய்யப்பட்டால் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadas) உறுதியளித்துள்ளார்.
விமர்சனங்களை ஏற்படுத்திய கருத்து
1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்த திருத்தத்தை புறக்கணித்ததற்காக கடந்த கால தலைவர்களை பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் இந்த கருத்து தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தற்போதைய ஜனாதிபதியிடம் இருந்து இது தொடர்பான கருத்துக்கள் வெளியாகவில்லை.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளதுள்ளமை தொடர்பிலும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
