மன்னார் மாவட்டத்தின் முதல் நீதிபதியாக சட்டத்தரணி அரியரட்ணம் வில்பிரட் அர்ஜூன் நியமனம்
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் எதிர்வரும், 01.12.2023 ஆம் திகதி முதல் நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை பெற்றுக்கொண்ட அர்ஜுன் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றில் முதலாவது நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ரீதியாக சித்தி
அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிபதிகளை உள்வாங்குவதற்கு என இடம் பெற்ற போட்டி பரீட்சையில் தேசிய ரீதியாக சித்தியடைந்ததுடன் 14 வது நிலையையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி 25 பேர் நாட்டின் நீதிபதிகளாக கடமைகளை பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



