பொருளாதார வளர்ச்சியால் உயரும் இலங்கையின் கடன் தரம் : அரசாங்கத்தின் நகர்வு குறித்து அருண் ஹேமச்சந்திரா
நாம் பொருளாதார ரீதியாக பல்வேறு வளர்ச்சிகளை கண்டு வருகின்றோம் என்றும், இலங்கையின் கடன் சம்மந்தப்பட்ட தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றகரமான தரத்தை அடைந்துள்ளது என்றும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
தம்பலகாமம் பகுதியில் நெல் காய வைப்பதற்காக ரூபா 10 இலட்சமும், பாரம்பரிய உணவு உற்பத்தி விற்பனை நிலையத்தை அமைப்பதற்கான இடத்தை தூய்மைப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று(28.11.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னரை விட பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டுவருகின்றோம். பொருளாதார ரீதியாக இருந்தாலும் சமூக ரீதியாகவும் ஒன்றினைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம்.
பொருளாதார வளர்ச்சி
நாடு என்ற ரீதியில் முன்னேற வேண்டுமானால் எமக்கிடையே ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சி இருக்க வேண்டும். ஆகவே கூட்டு முயற்சி என்பது இலகுவான காரியமல்ல மக்களை ஒன்றிணைப்பது என்பது மிகவும் கஷ்டமானது.

ஆனால் இன மத பேதங்களை துறந்து அனைவரும் ஒன்றினைந்து பயணிக்கும் பட்சத்தில் மாத்திரம் தான் இந்த நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வந்தார்கள்.
குறிப்பாக, நெல்லினை காய வைப்பது சந்தைப்படுத்துவது தொடர்பில் ஆகவே ஈரப்பதன் விடயம் இங்கு முக்கியமாக காணப்படுகிறது.
தற்போது தெரிவு செய்த இடம் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குத் சொந்தமானது இதன் மூலம் விவசாய மக்கள் நெல்லினை உலர வைத்து சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைகின்றது.
நெல் உற்பத்தி மூலமாக அதனை அரிசி அரிசி மாவாக ஆக்கி பல உணவு பொருட்களை தயாரிபாபதன் ஊடாக உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் இதற்காக நாமும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருகின்றோம் என்றார்.
