அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய பிரஜைகள்! எழுந்துள்ள சிக்கல்
சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலிய பிரஜைகள், அறுகம் குடா பகுதியில் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் வணிக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல வெளிநாட்டினர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
இலங்கையின் சுற்றுலாத் துறையில் அறுகம் குடா முன்னணி இடங்களில் ஒன்றாகும்.
அறுகம் குடா கடற்கரை பகுதி நீர்சறுக்கலுக்கு ஏற்றதாக இருக்கின்றமை இதற்கு முதன்மையான காரணமாகும்.
இதற்கிடையே, தற்போது இந்தப் பகுதிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலிய பிரஜைகள் என்று அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் வணிக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலிய பிரஜைகள்
சுற்றுலா சேவைகள் பல இஸ்ரேலிய பிரஜைகளால் வழங்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
சமீபத்திய விசாரணையில், சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலிய பிரஜைகள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, உள்ளூர் வணிக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, அறுகம் குடா பகுதியில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.




