உண்டியல் குலுக்கி பணம் சேகரித்து மைத்திரியிடம் ஒப்படைத்த கலைஞர்(Photo)
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்காக சகோதர மொழிக் கலைஞரான சுதத்த திலகசிறி உண்டியலை குலுக்கி பணம் சேகரித்துள்ளார்.
உண்டியல் குலுக்கி பணம் சேகரிப்பு
கொழும்பு -
கோட்டை பகுதியில் நேற்று முன்தினம்(17.01.2023) உண்டியலைக் குலுக்கிப் பணம் சேகரித்துள்ளார்.
இதன்போது, திரட்டப்பட்ட 1,810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் கையளித்துள்ளார்.
நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்தும் அளவுக்குத்
தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம்
பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும் முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
