இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம்! வெளியான காரணம்

CID - Sri Lanka Police Ampara Kandy Sri Lanka Police Investigation Canada
By Dhayani Jun 20, 2026 11:49 AM GMT
Report

கண்டி - தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியர் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற பெண் 17 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம் - ஏமாற்றப்பட்ட பல பெண்கள் - காதலன் தொடர்பில் வெளியான தகவல்

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம் - ஏமாற்றப்பட்ட பல பெண்கள் - காதலன் தொடர்பில் வெளியான தகவல்

 

மரணத்திற்கான காரணம்

இந்நிலையில், இவர் கழுத்து இறுகி மரணமடைந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம்! வெளியான காரணம் | Article Teldeniya Doctors Death Investigation

இதேவேளை, இந்த கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் காதலனை தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், இதுவரை சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் தொடர்பான பல தகவல்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ஹோட்டல் அறையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​16 ஆம் திகதி இரவு சுமார் 9.50 மணியளவில் அந்த பெண்ணின் காதலன் வருகை தந்து சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த பின்னர் இரவு சுமார் 10.30 மணியளவில் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை காரில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர் சந்தேகநபரான காதலன் சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தெல்தெனியா பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச்சென்று ஆய்வு செய்தபோது, ​​காரின் முன் இருக்கை மடிக்கப்படாமல், கருப்புத்துணியால் மூடப்பட்ட நிலையில் சடலம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் - மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் - மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

காதல் உறவு 

இருவரும் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு காதலிக்க தொடங்கியதாகவும், இளைஞனுடனான காதல் உறவு குடும்பத்தினருக்கு தெரிந்திருந்த நிலையில், இளைஞன் வெலிகமவில் உள்ள அவளது வீட்டிற்குப் பலமுறை வந்துச்சென்றுள்ளதைாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக தினேஷ் ஷ்யாமாவிடம் கூறி பெருந்தொகை பணத்தை கடணாக பெற்ற நிலையில், வாக்குறுதியளித்தபடி வட்டியை செலுத்தாததால், கடன் தொல்லையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம்! வெளியான காரணம் | Article Teldeniya Doctors Death Investigation

இதனையடுத்து நுவரெலியாவில் ஒன்றரை இலட்சம் ரூபாய் மாத வாடகையில் ஆடம்பரமான வீட்டை வாங்கி திருமணமான தம்பதியை போன்று அங்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இருவரும் ஒன்றாகச் சென்றபோதிலும், தினேஷ் அந்த வீட்டில் அதிக நேரம் செலவிடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பெண்ணின் உடலைக்கொண்டு செல்ல பயன்படுத்திய கார், அம்பாறை பகுதியில் வசிக்கும் அவரது மற்றொரு தோழிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் எரிபொருளுக்கான QR பயன்பாடு தொடர்பான அறிவிப்பு

இலங்கையில் எரிபொருளுக்கான QR பயன்பாடு தொடர்பான அறிவிப்பு

போலி யெரில் காதலன்

சந்தேகநபர் குறித்த பெண்ணுக்கு 'தினேத் திஸாநாயக்க' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது தேசிய அடையாள அட்டையில் உள்ள உண்மையான பெயர் 'ஜயசுந்தர முதியான்சேலாகே சம்பிக ஸ்ரியான் ஜயசுந்தர' என்பதும், அவர் நாரம்மல பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்து வந்துள்ளதுடன், இவருக்கு பல யுவதிகளுடன் தொடர்புகள் இருந்துள்ளதாகவும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்த பல சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம்! வெளியான காரணம் | Article Teldeniya Doctors Death Investigation

சந்தேகநபருக்கு எதிராக கம்பஹா, புதுக்கடை, திஸ்ஸமஹாராமய உள்ளிட்ட நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் இவருக்கு எதிராகப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இந்த சந்தேகநபரின் குற்றச் செயல்களுக்கு அவரது மனைவியும் ஆதரவளித்து உதவிகளை வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

இதேவேளை சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸார் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம்! வெளியான காரணம் | Article Teldeniya Doctors Death Investigation

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் காதலன் எனக்கூறப்படும் நபருக்கு எதிராக நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான இறுதிச் சடங்குகள் நேற்று இடம்பெற்றன.

சந்தேகநபர் தொடர்பாக தற்போது நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.    

அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம் - ஏமாற்றப்பட்ட பல பெண்கள் - காதலன் தொடர்பில் வெளியான தகவல்

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம் - ஏமாற்றப்பட்ட பல பெண்கள் - காதலன் தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US