இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 722,276 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 229,298 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்ததுடன் அந்த எண்ணிக்கை 39,212 ஆகும்.
சுற்றுலாப் பயணிகள்
அத்துடன், ரஷ்யாவில் இருந்து 29, 177 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 22,447 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 17, 918 சுற்றுலாப்பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதனிடையே, சீனா, அவுஸ்திரேலியா ,போர்த்துக்கல் போன்ற நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |