மன்னார் கடற்பகுதியில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு!
மன்னார் கடற்பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து ஹஷீஷ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தாகச் சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகொன்றை கடற்படையினர் இன்று (14.2.2026) கையகப்படுத்தி இருந்தனர்.
அத்துடன் அந்தப் படகில் இருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
சட்ட நடவடிக்கை
குறித்த படத்திலிருந்து போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த படகில் 50 கிலோகிராம் விட அதிகமான ஹஷீஷ் போதை பொருள் உள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் ஹஷீஷ் போதை பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.