இலங்கையில் பெருந்தொகை பணமோசடி: மாலைதீவில் சிக்கிய இலங்கையர்
மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட பல்வேறு நபர்களை ஏமாற்றி சுற்றுலா விசாவில் மாலைத்தீவுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த இலங்கையரொருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில், அவர் நாடு கடத்தப்பட்டதன் பின்னர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் தம்மிடம் பெறுமதியான இரத்தினக் கற்கள் இருப்பதாகக் கூறி அவற்றை முதலீட்டுக்குக் கொடுத்து மாணிக்கக்கல் வியாபாரிகளிடம் இருந்து இருநூறு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தினை மோசடி செய்து மாலைத்தீவிற்கு தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
