இராமேஸ்வரத்தில் கைதான இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளத்தில் இருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இராமேஸ்வரம் கடற்கரையில் நின்ற வேளை தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இருவரும் திசைமாறிப் பயணித்தனர் என்று தெரிவித்தபோதும் தமிழகப் பொலிஸார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பயணித்த படகில் எந்தவொரு மீனோ அல்லது கடற்றொழில் உபகரணங்களோ காணப்படாத நிலையில் இரு காண்களில் 55 லீற்றர் எரிபொருளும் காணப்பட்டுள்ளது.

மேற்படி இருவரும் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam