கைதான இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியல் வைக்க உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை (01.08.2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (21) இரவு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகு ஒன்றையும் அதிலிருந்து 4 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களையும், இழுவைப் படகையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 9 மணி நேரம் முன்

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
