300 போலி முத்திரைகளுடன் நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இரண்டு காணிகளை போலி பத்திரங்கள் மூலம் சுவீகரித்து, போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சதேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு கடவுச்சீட்டு, பிறருக்கு சொந்தமான 11 ஓட்டுநர் உரிமங்கள், 4 வெளிநாட்டு தேசிய அடையாள அட்டைகள், பல்வேறு பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், வைத்தியசாலைகள், மாவட்ட செயலகம், பல்வேறு பாடசாலைகள் மற்றும் சிறைச்சாலைகள், பல்வேறு வங்கிகள், மதிப்பீட்டு திணைக்களம், வருமான வரி திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இலங்கை போக்குவரத்து திணைக்களம்,கிராம அதிகாரிகள், மருத்துவர்கள், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான 300 போலி அதிகாரப்பூர்வ முத்திரைகள் சந்தேக நபரின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 72 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |