தமிழர் பகுதியில் சி.ஐ.டி எனக்கூறி கைவரிசை காட்டிய மூவர் கைது
சி.ஐ.டியினர் எனக்கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (30.12.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்களும், கிளிநொச்சியைச் சேர்ந்த 29 வயது இளைஞரும் உள்ளடங்கியுள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு
நேற்றைய தினம் (29.12.2023) வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடப்பகுதியில் நின்ற மூன்று இளைஞர்கள் அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவரை மறித்து தாம் சி.ஐ.டியினர் எனக்கூறி தாண்டிக்குளம் குளக்கட்டு பகுதியில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர்.
இதன் பின்னர் இளைஞரிடம் இருந்த கையடக்கத்தொலைபேசியை பறித்து கொண்டு மூன்று இளைஞர்களும் தப்பிச்சென்றுள்ளனர்.
இவ்வாறு தப்பிச்சென்றவர்கள் மடுகந்த பகுதிக்கு சென்று அங்கு வீதியால் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துச்சென்றுள்ளனர்.
இந்நிலையில், இரு சம்பவங்கள் தொடர்பிலும் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகள் முன்னெடுப்பு
இதனை தொடர்ந்து, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பாதிகாரிகள் மற்றும் பொலிஸ் குழுவினர் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மேலதிக விசாரணைகளின் பின்னர் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
