சஹ்ரான் ஹாசிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டாரா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த சந்தேகநபர் ஒருவரை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி 4ஆம் பிரிவைச் சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி.ஜவ்ராஸ் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமின் சகாக்களுடன் கடந்த காலத்தில் தொலைபேசியில் தொடர்பை பேணிவந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே தாக்குதல் தொடர்பாக கைதாதியுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தமிழ்வின் செய்திப்பிரிவு, பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்த்துவவை தொடர்பு கொண்டு வினவிய போது, இந்த கைது சம்பவம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.