ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்னவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இரண்டு வழக்குகளுக்கு முன்னிலையாகத் தவறியதனால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.
இந்த இரு வழக்குகளும் 2008 ஆம் ஆண்டு முதல் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அரச காணி பகிர்வு தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தனது கட்சிக்காரர் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என விளக்கம் அவரது சட்டத்தரணி நீதிமன்றில் விளக்கம் அளித்திருந்தார்.
எனினும், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னலையாகத் தவறியதனால், அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிடி விராந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri