முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிரான வழக்கின் பிரதான சாட்சியை கைது செய்ய பிடியாணை
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதான சாட்சியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கூற்று
2019 தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, வெள்ளை வேனில் கடத்தப்பட்ட மக்களை முதலைகளுக்கு உணவாக வழங்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இச்சர்ச்சைக்குரிய கூற்றை வெளியிட்டமை தொடர்பில், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் உட்பட முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கும் எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பு
குறித்த வழக்கின் பிரதான சாட்சியான எஸ்.ஏ.சரத் குமார நீதிமன்றத்தை வேண்டுமென்றே தவிர்த்து வருவதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த அவர் மீது பிடியாணை பிறப்பித்திருந்தார்.
எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதால், சரத் குமாரவின் சாட்சியங்கள் விசாரணைக்கு இன்றியமையாதவை என்று முன்னதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையிலேயே பிரதான சாட்சிக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
