பாரிய மோசடியில் ராஜபக்ச குடுபத்திற்குள் சிக்கிய மற்றுமொரு நபர்
இலங்கையில் மேற்கொண்ட பாரிய ஊழல் மோசடியில் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொருவர் சிக்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எயார்பஸ் விமான கொடுக்கல் - வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக வெளிநாட்டிலுள்ள சசீந்திர ராஜபக்ஸ கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் இளைய புதல்வரான சசீந்திர ராஜபக்சவை மூன்றாவது சந்தேகநபராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பெயரிட்டுள்ளது.
நீதவான் உத்தரவு
அமெரிக்காவில் தற்போது வாழ்ந்து வரும் சசீந்திர ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கத்தின் போது ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரான்ஸைத் தளமாகக் கொண்ட எயார் பஸ் நிறுவனம் சுமார் 16.84 மில்லியன் அமெரிக்க டொலர்களை லஞ்சமாக வழங்க இணங்கியமை தெரியவந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த ஊழலில், ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam