கடற்றொழிலாளரை மிரட்டி கொள்ளையிட்ட நபர் கைது
அம்பாறை-பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் கடற்றொழிலாளரை மிரட்டி ஒரு தொகுதி பணத்தை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(1) இடம்பெற்றுள்ளது.
கடற்றொழில் வியாபாரம் செய்து வரும் நபரை பின்தொடர்ந்த சந்தேக நபர் அவரை மிரட்டியதுடன் அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றிருந்தார்.
சட்ட நடவடிக்கை
இதன் போது கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய துரிதமாக செயற்பட்ட பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரன் தலைமையிலான பொலிஸார் உடனடியாக சந்தேக நபரை கைது செய்தனர்.

இதன் போது சந்தேக நபர் கொள்ளையிட்டு சென்ற பணம் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை மீட்ட பொலிஸார் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் 50 வயது மதிக்கத்தக்க கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri