யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது

Jaffna Sri Lanka India
By Thileepan Nov 08, 2025 01:26 PM GMT
Report

யாழ்ப்பாணத்திலிருந்து நாட்டுப்படகில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக தமிழகம் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் தமிழக  கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமாக ராமேஸ்வரம் வந்து இறங்கிய நபர் கைது செய்யப்பட்டு பரமக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கையர் ராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று (08.11) அதிகாலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு பொலிஸார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இருந்த பூங்காவில் சந்தேகத்துக்கிடமாக அமர்ந்திருந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் இலங்கை பணம், இலங்கை கடவுச்சீட்டு, இலங்கை அரச அடையாள அட்டையும் இருந்தமை தெரியவந்துள்ளது.

கொஸ்கொட சுஜியின் நெருங்கிய உறவில் அநுர கட்சி பெண் உறுப்பினர் : அதிரவைக்கும் வாக்குமூலம்

கொஸ்கொட சுஜியின் நெருங்கிய உறவில் அநுர கட்சி பெண் உறுப்பினர் : அதிரவைக்கும் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது | Arrest Srilankan Entered Tamil Nadu Illegally Sea

தீவிர விசாரணை

இதனையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன் (34) என்பது தெரியவந்துள்ளது.

கண்ணன் கடந்த 6 ஆம் திகதி இரவு இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் பைபர் படகில் புறப்பட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வந்து இறங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது | Arrest Srilankan Entered Tamil Nadu Illegally Sea

இதன்பின்னர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள கண்ணனின் மனைவியை பார்ப்பதற்காக வேதாரணியத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் வந்திறங்கி மண்டபம் அகதிகள் முகாமிற்கு செல்வதற்காக பூங்காவில் அமர்ந்திருந்த போது கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட கண்ணனை பொலிஸார் ராமேஸ்வரம் நகர்  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இவர் மீது கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை பரமக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வரும் 21ஆம் திகதி வரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கையில் தலைதூக்கியுள்ள பாதாள உலகக்கும்பல்கள்: அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் தலைதூக்கியுள்ள பாதாள உலகக்கும்பல்கள்: அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US