கிளிநொச்சியில் நபரொருவர் கைது: துப்பாக்கி மீட்பு
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் 82 கசிப்பு போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட சோதனை
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 82 கசிப்பு போத்தல்கள் மற்றும் 238 லீட்டர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும், உள்ளூர் இடியன் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நபரொருவர் கைது
துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்றைய தினம் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து கடல் வழியே தமிழகம் சென்ற போலந்து நாட்டவர் கைது (Photo) |