மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வர நடவடிக்கை
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இலங்கை திரும்ப அழைத்து வரவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களை நாளை 23ம் திகதியன்று திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியன்மார் அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர்கள் நாளை மியன்மாரின் யங்கூனில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச்செல்லப்;பட்டு பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இதனையடுத்து தற்போதைய சுகாதார நடைமுறைகளின் கீழ் மீனவர்களை தனிமைப்படுத்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம்
தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
