பாதாள உலகக்குழுத் தெல் பாலாவின் மகள் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் தெல் பாலா என அழைக்கப்படும் கருப்பையா பாலன் என்ற பாதாள உலகக்குழு தலைவரின் மகள் 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான கருப்பையா நிர்மலா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
சந்தேக நபரின் தந்தையான தெல் பாலா இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
இந்தியாவில் தலைமறைவாக இருந்த அவர்03 வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் மரணமடைந்தார்.
இந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டுள்ள தெல் பாலாவின் மகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri