தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அம்பிட்டிய தேரர் : சமூக செயற்பாட்டாளர் காட்டம்
மயிலத்தமடு தமிழர்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ள அம்பிட்டிய தேரர் என்ற இனவாத பிக்கு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ரஜீவ் காந்த் தெரிவித்துள்ளார்.
வடக்கு - தெற்கு ஒருங்கமைப்பினால் இன்று (22.12.2023) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
தேரரின் அச்சுறுத்தல்கள்
நூறாவது நாளாக தொடரும் மயிலத்தமடு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் வடக்கு - தெற்கு ஒருங்கமைப்பினால் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் என்ற இனவாத பிக்கு ஒருவரால் தொடர்ச்சியாக மயிலத்தமடு விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். அவரின் இனவாத கருத்துக்களுக்கு எதிராக நாங்கள் முறைப்பாடு செய்தும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
மயிலத்தமடு மேய்ச்சல் நிலத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக திகழும் இந்த இனவாத தேரர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri