இலங்கையில் அதிகளவில் கடவுச்சீட்டுக்களைப் பெறும் இளைஞர், யுவதிகள்!
இலங்கையில் தற்போது இளைஞர், யுவதிகளே அதிகளவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வழமைக்கு மாறாக அதிகளவானோர் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 33,000 கடவுச்சீட்டுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக் காரியாலத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1500 முதல் 1700 பேர் வரையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஒருநாள் மற்றும் சாதாரண முறையில் இவ்வாறு கடவுச்சீட்டுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி முதல் இரண்டு வாரங்களில் மொத்தமாக தலைமைக் காரியாலயத்தில் 23500 பேர் புதிய கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோர் குறித்து குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தகவல்
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri