இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான பயணத்தடைக் கோாிக்கை : மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் ஆதரவு
இலங்கையில் போா்க்குற்றத்தில் தொடா்புடையதாகக் கூறப்பட்டு, இலங்கையின் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக இங்கிலாந்தில் பயணத்தடை விதிக்கப்படவேண்டும் என்ற கோாிக்கைக்கு தொழில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் சாரா ஜோன்ஸ் (Sarah Johns) தமது ஆதரவை வெளியிட்டுள்ளாா்.
ஏற்கனவே தொழில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் ஸ்டெபன் டிம்ஸ் (Stephen Timms), முன்வைத்துள்ள இந்தக்கோாிக்கைக்கு இங்கிலாந்து அரசாங்கம் தமது ஆதரவை வழங்கவேண்டும் என்று சாரா ஜோன்ஸ் கோாியுள்ளாா்.
இது தொடா்பில் அவா் டுவிட்டா் பக்கத்தில், காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளாா்.
தமது தொகுதியில் வசிக்கும், இலங்கையில் தமிழா்கள் உள்நாட்டுப்போாினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தொடா்ந்தும் உணா்கிறது.
அத்துடன் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் நீதி மற்றும் பொறுப்புக் கோரலுக்கு தகுதியானா்கள் என்றும் சாரா ஜோன்ஸ்( Sarah Johns) குறிப்பிட்டுள்ளார்.
சாரா ஜோன்ஸ், இங்கிலாந்தின் க்ரோய்ட்ன் மத்திய தொகுதியின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராவாா்
முன்னதாக இது தொடா்பில் கோாிக்கையை முன்வைத்த தொழில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் ஸ்டெபன் டிம்ஸ், (Stephen Timms) அமாிக்கா ஏற்கனவே ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளமையைச் சுட்டிக்காட்டியிருந்தாா்.