வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் பலி
பொலன்நறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கதுருவெல 28 வது மைல் கல்லுக்கு அருகில் இன்று சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலன்நறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்நறுவை ஹதரஹெல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ரத்னகுமார என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர்கள் மினேரியாவில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இவர், சிகிச்சைக்காக பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
மரணம் சம்பந்தமான திடீர் மரண விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனைகள் இன்று பொலன்நறுவை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக விசாரணை நடத்தும் பொலிஸார் கூறியுள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan