வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கிடையில் இராணுவத்தினர் தீவிர சோதனை
வடக்கு -கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு தொடர்பில் திருகோணமலை மாவட்ட ரொட்டவெவ பகுதியில் இராணுவத்தினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களிலிருந்து திருகோணமலை நோக்கி அனுமதி இல்லாமல் வருகின்ற அனைத்து வாகனங்களையும்,இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து திருப்பி அனுப்பியதையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்துள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்காமல் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்துக்குள் உள் நுழையும் போது அக்போபுர-ரொட்டவெவ,
வெருகல் போன்ற பகுதிகளில் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவ உயர் அதிகாரியொருவர்
தெரிவித்துள்ளார்.

