யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் வெடிபொருட்கள் - ஒருவர் கைது: செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் பயணித்த இராணுவ படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களை கொண்டு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி மதவாச்சி நகரில் பேருந்தில் கைப்பற்றப்பட்ட சக்திவாய்ந்த வெடிமருந்துகளை கொண்டு சென்ற அதிகாரி ஒருவரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு மதவாச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (03) மதவாச்சி பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர் எதிர்வரும் 6ஆம் திகதி வரையான 03 நாட்களுக்கு பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமுறுகண்டி, கிளிநொச்சி இராணுவ முகாமில் உள்ள இராணுவ படைப்பிரிவில் கடமையாற்றிய 33 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan