திடீரென இலங்கையில் குறைக்கப்படும் இராணுவ பலம்!
இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை அடுத்த வருடம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது 200,783 ஆக உள்ள இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும்.
இலங்கையின் இராணுவ பலம்
2030 ஆம் ஆண்டுக்குள் படையினரின் எண்ணிக்கையை 100,000ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இராணுவ பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.
அவை ஒன்றாக இருக்கும், ஆனால் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு பரிமாணங்களுக்கு இணையாக வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், 2030ஆம் ஆண்டிற்குள் தொழிநுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே மூலோபாய வரைபடத்தின் ஒட்டுமொத்த நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
