மே மாதம் கோவிட் தாக்கம் உச்சமடையும்! - இராணுவத் தளபதி எச்சரிக்கை
நாட்டு மக்கள் கோவிட் வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கையை கோவிட் வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தடுப்புச் சட்டங்களை மீறி பொருள் கொள்வனவுகளில் ஈடுபடும் மக்கள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
மக்கள் இவ்வாறு கட்டுப்பாடின்றி செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
சித்திரைப் புத்தாண்டு காலப் பகுதியில் கோவிட் தடுப்பு தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்படும் பட்சத்தில், வேறு எந்தவொரு பண்டிகைகளையும் கொண்டாட முடியாது போகும்.
பெருமளவான மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam