பயண கட்டுப்பாடுகள் தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்
மறு அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையிலான பொதுமக்களின் இயக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையில் சேவைகளுக்கான இயக்கத்தை தளர்த்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 10 அன்று, சுகாதார சேவைகளின் பணிப்பாளர் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார்.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாகாண பேருந்துகள் மற்றும் தொடரூந்துகள் ஜூலை 14 முதல் அத்தியாவசிய கடமைகளுக்காக இயங்க அனுமதிக்கப்பட்டன.
இருப்பினும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் தொடரூந்துகளை ஆகஸ்ட் முதலாம் திகதி வரை நிறுத்த வேண்டியேற்பட்டது.
இதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட பேருந்துகள் மற்றும் தொடரூந்து சேவைகள் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் இயங்கும் என்றாலும், மேலும் அறிவிக்கப்படும் வரை மாகாணங்களுக்கு இடையிலான இயக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
