இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு ஊடுருவ முயற்சிக்கும் ஆயுதக்குழு
இலங்கையில் இருந்து ஊடுருவ முயற்சிக்கும் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல்கள் வந்ததையடுத்து தமிழக மாநில காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளன.
ஐ.ஏ.என்.எஸ் செய்திச் சேவை இதனை தெரிவித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை மத்திய புலனாய்வு அமைப்பால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், அத்துடன் சென்னை ஆகிய நகரங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தகவலறிந்த உளவுத்துறை தகவல்களின் படி, ஆயுதமேந்தியவர்களுடன் ஒரு படகு ராமேஸ்வரம் கடற்கரையை நோக்கி சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவர்களின் சரியான அடையாளம் மற்றும் அவர்கள் சேர்ந்த அமைப்பு எது என்பது தொடர்பில் தகவல்கள் இல்லை என அந்த உளவுத்துறை தரப்புகள் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்துள்ளன.
சென்னையில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் இது தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதை விட தற்போது தம்மால் எதனையும் வெளிப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து முக்கிய வீதிகளிலும் ஆயுதமேந்திய காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்கள்.
தமிழ்நாடு கடற்கரையை அடைவதற்கான எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க கடலோர காவல்படையினரால் கடலில் அதிக கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கேரள காவல்துறையின் புலனாய்வுத் தரப்பு, நிறுவனங்களிடம் இருந்து கிடைத்த
தகவல்களுக்குப் பின்னரே தமிழக கடலோர நகரங்கள் முழுவதும் கண்காணிப்புகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri