அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அர்ச்சுனா இராமநாதன் இன்று (29) பிற்பகல் விசேட பொலிஸ் குழுவினால் யாழில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணையின் போது, தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் தீர்மானித்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மீண்டும் விசாரணை
அதன்படி, இந்த வழக்கு பெப்ரவரி 3ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 20 ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பின்னர் அனுராதபுரம் பொலிஸார் இந்த விடயம் குறித்து விசாரணைகளைத் தொடங்கி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri