அர்ஜுன மகேந்திரனுக்கு சிங்கப்பூரில் உயர் பதவி! உயர் விருதுகள்
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள ஒரு முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தற்போது சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர் அங்கு முதலீட்டு நிபுணராக பணிபுரிகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பல சர்வதேச விருதுகள்
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, அவர் சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதலீட்டு மேலாண்மை, நிதி வள மேலாண்மை, பங்குச் சந்தை மற்றும் பத்திர முதலீடுகளில் ஆலோசகராகப் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

அவர் பணிபுரியும் நிறுவனம், 2016 இல் நிறுவப்பட்டது என்றும், இது சிங்கப்பூர் மற்றும் ஹொங்காங்கிலிருந்து இயங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை நிர்வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த நிறுவனத்தின் சேவையைப் பாராட்டி அவர் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அவர் 2016 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு சென்ற அவரை பத்திர மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள அரசாங்கம் இலங்கைக்கு அழைத்து வர முயற்சித்த போதிலும், சிங்கப்பூர் இதுவரை அவரை அனுப்ப மறுத்து வருவதாக இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது.
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam