மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு மீண்டும் அழைப்பாணை
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறிமோசடி தொடர்பான வழக்கு நேற்று முன்தினம்(26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு பிரதான நீதவான் நீதவான் அசங்க போதரகம குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்டுள்ள விசாரணை
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான விசாரணையின் போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டத்தின் கீழ் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர முடியும் என்று இலஞ்சம் மற்றும்ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து அர்ஜுன் மகேந்திரனுக்கு குறித்த வழக்கில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam