அரியநேத்திரனுக்கு உயிரச்சுறுத்தல்: புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு உயிரச்சுருத்தல் இருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரால் சிங்களத்தில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தங்களது பாதுகாப்பு தொடர்பில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் தன்மை இம்முறை தேர்தலில் தங்கள் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதெனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனூடாக முழு தேர்தல் பெறுபேறுகளுக்கும் ஏற்படக்கூடிய தாக்கத்தை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் புலனாய்வு அறிக்கை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது.
பொதுமக்கள் சந்திப்பு
எதிர்காலத்தில் நீங்கள் கலந்துகொள்ளும் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது அந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு தாழ்மையுடன் அறிவிக்கின்றோம்.
புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நீங்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கூறிய விடயங்களுக்கு மேலதிகமாக சகல வேட்பாளர்களுக்கும் கீழ் குறிப்பிட்ட பொது விடயங்களின் கீழ் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் மேலும் கேட்டுக்கொள்கின்றேன்” என குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |