கிழக்கிலுள்ள தமிழர்கள் விரைவில் அழிந்துபோகும் அபாயம் : கஜேந்திரன் தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம்தெரியாது அழிந்து போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தேர்தல் புறக்கணிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நில அபகரிப்பு
மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களுடைய தலைநகரமாக இருக்ககூடிய திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் கபளீகரம் செய்யப்படு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டுகின்றது.
இந்த செயற்பாடுகள் நடைபெறுகின்றபோது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாஸ எதிர்கட்சி தலைவராகவும் அநுர குமார திசாநாயக்க வலிமையான ஒரு எதிரணியினுடைய கட்சி தலைவராகவும் நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டிருக்கும் போது தான் இந்த பௌத்தமயமாக்கல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதேபோல மட்டக்களப்பு எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் 3 இலட்சம் மாடுகள் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இவை
எல்லாம் நடைபெறுகின்றபோது சஜித்தோ, அநுரவோ, ரணிலோ இதனை தடுப்பதற்கு எந்தவிதமான
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிழக்கு மாகாணம்
இன்று அம்பாறை மாவட்டம் முற்றாக பறிபோவிட்டது அதேபோல திருகோணமலை மாவட்டமும் கிட்டத்தட்ட மிகப் பெரியளவில் பறிபோய்விட்டது. மட்டக்களப்பு மாவட்டம் பறிபோகத் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் கிழக்குடன் வடக்கு இணைந்தால் மாத்திரம் தான் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வடக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இணையும்போது தங்களுடைய இருப்பை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்.
இந்த இணைவு நடைபெறவில்லை என்றால் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம்தெரியாது அழிந்து போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
