பிரித்தானியாவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஊர்தி எழுச்சிப்பயணம்
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்தி எழுச்சிப்பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஊர்தி எழுச்சிப்பயணமானது, “நாமும் இணைந்தால் பலமே” என்ற தொனிப்பொருளில் தியாக தீபம் திலீபன் நோன்பிருந்த ஆரம்ப நாளான இன்று (15) முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆதரவு அறிக்கை
இந்தநிலையில், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரும் குறித்த பயணமானது பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “Roxeth recreation ground Ha2 8LF South Harrow ” இப்பயணம் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் தேசிய அமைப்புக்களின் ஆதரவு அறிக்கையும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
