மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் வைத்தியசாலையில்
புதுக்குடியிருப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்து சம்பவம் ஒன்று இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சாரதி இருவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 45 வயது மதிக்கதக்க பெண் மற்றும் சிவநகரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞனுமே காயங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடதக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri