மக்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கிய தமிழ் வர்த்தகருக்கு நேர்ந்த கதி
மூதூரில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி பொது மக்களுக்கு பணம் கொடுத்த தமிழ் வர்த்தகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபா பணம் வழங்கிய 26 வயதான வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரிய முல்லை பாலத்திற்கு அருகிலுள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து பணம் வழங்குவதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
மக்களுக்கு பணம்
இதன்போது மேற்கொண்ட விசாரணையை அடுத்து குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
அதனை நோக்கமாக கொண்டு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி பொது மக்களுக்கு பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri