மண்டைதீவு உப அலுவலகத்தில் அரச சொத்து முறைகேடு: வேலணை பிரதேச சபை அமர்வில் வாக்குவாதம்
மண்டைதீவு சுற்றுலா தளத்தின் அமைவில் அரச நிதியும் சொத்துக்களும் உயரதிகாரிகள் மூவரால் சூறையாடப்பட்டதாக கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று(21.01.2026) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மோசடி
இந்த அமர்வில், "எக்கோ டூரிசம்" குறித்து பல்வேறு பிரச்சினைகள் சபையில் பிரஸ்திக்கப்பு விவாதிக்கப்பட்டன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வேலணை பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்பை கருத்தில் கொண்டும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்தத் திட்டத்திற்கான பொறிமுறை முறையாகக் கட்டமைக்கப்படவில்லை. வேலணை பிரதேச செயலகம் தனது திட்ட வரைபாட்டுடன் கொண்டு வந்த குறித்த திட்டத்தை, அன்றைய மாவட்ட அரச அதிபர் எமது பிரதேச சபையிடம் வலியுறுத்தியே கையளித்தார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இருப்பினும், குறித்த திட்டம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் மோசடிகளை எமது சபை கடந்த 2018ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்ததுடன், அவை அன்றைய துறைசார் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அந்த அமைச்சரால் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
எனவே குறித்த விடயம் தொடர்பில், உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வை எட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam