கண்டியில் கண்டெடுக்கப்பட்ட மர்ம கல் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்
கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத சாதாரண லேப்ரடோரைட் வகையை சேர்ந்தவை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்ட அதிகாரிகள், இது உயர்தர வணிக அல்லது சந்தை மதிப்பைக் கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இது லேப்ரடோரசென்ஸ் என அழைக்கப்படுகிறது. பொதுவாக நீல நிறத்தை கொண்டுள்ள இது, மற்றொரு பாறைக்குள் பொதிந்துள்ள சிறிய அளவிலான லேப்ரடோரைட் கல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வானவில் போன்ற காட்சி
இது பெல்ட்ஸ்பார் வகையை சேர்ந்த ஒரு கனிமமாகும். இதன் தனித்துவமான கனிம குணாதிசயங்களை எளிதாகக் கண்டறிய முடியும்.

இந்தக் கல்லின் மீது ஒளி விழும்போது ஏற்படும் வானவில் போன்ற காட்சி தரும் தோற்றத்தை கொண்டுள்ளது.
இத்தகைய தோற்றத்திற்காகவே இது பிரபலமாக அறியப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam